ADDED : செப் 30, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை; திருச்சி அழகபுரியை சேர்ந்தவர் சுந்தர், 31; பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில், மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் தங்கி, திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளை-யத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில், வீட்டில் இருந்து தொழிற்சாலைக்கு யமாகா கிரஸ் ரைடர் பைக்கில் புறப்பட்டார். அப்போது பொலிரோ பிக்-அப் வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுந்தர் இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
