/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த வாலிபர்
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த வாலிபர்
ADDED : ஜூன் 01, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கன்னியாக்குமரி, குலசேகரம், சங்கரன் விளையை சேர்ந்தவர் ஜெபகனி, 21; ஈரோடு பஸ் ஸ்டாண்ட் மேட்டூர் ரேக்கில் மயங்கிய நிலையில் கிடந்தார். டவுன் போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஊழியர்கள் வந்து பார்த்தபோது இறந்தது தெரியவந்தது. அவரது பாக்கெட்டில் ஆதார் அட்டை இருந்ததால், முகவரியை கண்டுபிடித்து, குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விஷம் குடித்ததால் இறந்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.