/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த வாலிபர்
/
டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த வாலிபர்
ADDED : ஜூன் 08, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, வ.உ.சி. பார்க் பின்புறம், டாஸ்மாக் கடை உள்ளது. இப்பகுதியில், 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத வாலிபர், நேற்று மாலை இறந்து கிடப்பதாக, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஆய்வு நடத்தினர்.
இறந்த வாலிபரின் உடலில் ரத்த காயங்கள் இல்லை. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. விசாரணையில் மதியம், 1:30 மணியளவில் கடை அருகே விழுந்தவர், தரையில் உருண்டபடி கிடந்ததாக அங்கிருந்த குடிமகன்கள் தெரிவித்தனர். பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்னர்.