/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேலம் ரவுடி கொலையில்வாலிபருக்கு குண்டாஸ்
/
சேலம் ரவுடி கொலையில்வாலிபருக்கு குண்டாஸ்
ADDED : ஏப் 23, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான், கடந்த மார்ச், 19ல் நசியனுார் அருகே கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தில் வெட்டு காயம்பட்ட சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (எ) மைனா கார்த்தியை, 29, சித்தோடு போலீசார் கைது செய்து, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
கார்த்திகேயனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க, சித்தோடு போலீசார் எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனையை ஏற்றதால், கார்த்திகேயன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.