/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2025 05:14 AM

உளுந்துார்பேட்டை: இந்தி திணிப்பை கண்டித்து உளுந்துார்பேட்டையில் தி.மு.க., கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், வசந்தவேல், முருகன், கம்யூ., நிர்வாகிகள் ஆறுமுகம், தங்கராஜ், தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், துணை அமைப்பாளர்கள் பாண்டியன், அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தனர்.
ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

