/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கண்ணாடி அறையில் பெருமாள் அருள்பாலிப்பு
/
கண்ணாடி அறையில் பெருமாள் அருள்பாலிப்பு
ADDED : ஜன 15, 2024 02:22 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெரு மாள் கோவிலில் கண்ணாடி அறையில் பெருமாள் பள்ளி கொண்ட உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத உற்சவம் நடந்து வரும் நிலையில், கண்ணாடி அறையில் பெருமாள் தாயார் சகிதம் பள்ளி கொண்ட உற்சவம் நேற்று மாலை நடந்தது.
இதையொட்டி மாலை 6:00 மணிக்கு பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.
பின், உற்சவ மூர்த்திகளுக்கு நகை, பட்டாடை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறையில் பள்ளி கொண்ட நிலை யில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து சாற்று முறை சேவை, ஆராதனை, அலங்கார தீப வழிபாடு நடந்தது.
அதன் பின் கண்ணாடி அறையில் பெருமாளுக்கு பழ வகைகள், இனிப்பு வகைகள் வைத்தபின் திருக்காப்பு செய்யப்பட்டது.
நேற்று விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், பசு பூஜைக்கு பின் கண்ணாடி அறை திறந்து நித்யபடி பூஜை நடந்தது. தேசிக பட்டர் வழிபாட்டினை செய்து வைத்தார்.