தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கணக்கெடுப்பு பணி ‘ஜரூர்’

கணக்கெடுப்பு பணி ‘ஜரூர்’

கணக்கெடுப்பு பணி ‘ஜரூர்’


ADDED : ஆக 09, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 06:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ம் ஆண்டுக்கான பணி ஜூலை 17 முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு முறையில் நடந்தது. அடுத்த கட்டமாக வீடுகள் தோறும் நேரடியாகச் சென்று வீட்டுப்பட்டியல் கணக்கெடுக்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணிக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,119 கணக்கெடுப்பாளர்கள், 356 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று குடும்பத் தலைவர் பெயர், கதவு எண், வீட்டின் நிலை குறித்த 33 கேள்விகளை கேட்கின்றனர்.

அதற்கான பதிலை ஆன்லைன் மூலம் பதிவு செய்துக் கொள்கின்றனர். ஏற்கனவே ஆன்லைன் மூலம் வீட்டு பட்டியலை பதிவிட்டவர்களிடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆன்லைன் ஒப்புகை எண்ணை பெற்றுக் கொள்கின்றனர்.

அவ்வாறு பதியாதவர்கள் மற்றும் ஒப்புகை எண்ணை வழங்காதவர்களின் வீடுகள் குறித்து நேரடியாகச் சென்று பதிவு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us