/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி
/
மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி
ADDED : செப் 16, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: உலக முதலுதவி தின விழா கொண்டாடப்பட்டது.
திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் முதலுதவி பயிற்சி மையத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் மகாவிஷ்ணு தலைமை தாங்கினார். சுஷ்மிதா வரவேற்றார்.
முதல் உதவி பயிற்சியாளர் ஜானகிராமன் பங்கேற்று, ஆபத்துக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து நேரடி விளக்க பயிற்சி அளித்தார். பயிற்சி மைய செயலாளர் சிவலிங்கம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சமீனா நன்றி கூறினார்.