ADDED : ஜூலை 26, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் மது பாட்டில்களுடன் பிடிபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாசார் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் சதீஷ், 32; என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர் 20 டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திரந்தது தெரிய வந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிந்து சதீஷை கைது செய்தனர்.

