ADDED : ஜூலை 29, 2026 07:13 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் சிங்கப்பெண் அதிரடிப்படையில் ஒரு பெண் சப்–இன்ஸ்பெக்டர், 2 பெண் காவலர்கள், ஒரு டிரைவர் உள்ளிட்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தனித்தனியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிங்கப் பெண் அதிரடிப் படை போலீசார் பள்ளி, கல்லுாரி மற்றும் பஸ் நிலையம், ரயில் நிலையம், தியேட்டர் போன்ற பொதுமக்கள் அதிகம் இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பெண்களுக்கு எதிரான இணைய வழி மோசடிகள், பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அவசர கால உதவி எண் 1091 தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படையில் நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
