ADDED : ஜூலை 27, 2026 07:00 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் எம்.எஸ். குழும நிறுவனர் சர்தார்மல்துகர் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு எம்.எஸ்., குழும உரிமையாளர் கோதம்சந்த் தலைமை தாங்கினார். குழும நிர்வாகிகள் அர்வின், ஆகாஷ் முன்னிலை வகித்தனர். விஜயராஜ் வரவேற்றார். நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா ஆகியோர் துாய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினர். தொடர்ந்து ஜெயின் திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து நடந்தது.
நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ், அ.தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் இளவரசன், இந்திய கம்யூ., மாநில நிர்வாகி சரவணன், ஐ.ஜே.கே., மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார்.
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளர் அண்ணாதுரை, லோகு முன்னாள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரஜினிகாந்த், நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், தொழிலதிபர் கிருஷ்ணன், பைனான்சியர் மகாவீர், ரமேஷ், கஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
