ADDED : ஜூலை 21, 2026 09:10 PM
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பள்ளியில் இறந்த மாணவன் குடும்பத்தினர் நிவாரணம் தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
புதுப்பாலப்பட்டு விஜயகுமார் மனைவி விஜயலட்சுமி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள நாங்கள் கூலி வேலை செய்கிறோம். எங்களுக்கு புவின்குமார், பிரணிதா, தர்ஷன் ஆகிய 3 பிள்ளைகள். இதில், மூத்தமகன் புவின்குமார்,14; புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்றார். கடந்த 16ம் தேதி பள்ளியில் மதிய உணவு இடைவெளியின் போது திடீரென மயங்கி விழுந்த புவின்குமார் உயிரிழந்தார். மகன் இறப்பு எங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எங்களது வறுமையை கருத்தில் கொண்டு முதல்வர் பொது நிவாரண தொகை வழங்கி உதவ வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
