/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா
/
பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மார் 10, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; உளுந்துார்பேட்டை அடுத்த ஐவதுகுடி ஐயப்பா பாலிடெக்னிக் மற்றும் ஐயப்பா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை அறங்காவலர்கள் ராஜேந்திரன், சரவணன் தலைமை தாங்கினர். முதல்வர் புனிதவதி மோகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஆடல், பாடல் உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, பருவத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர் ராகவன், மகுடவேல், பரமேஸ்வரன், மாணவியர் பொம்மி, கீர்த்தனா ஆகியோரை பாராட்டி சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
முதல்வர் வெங்கடேசன் நன்றி கூறினார்.