தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூலை 13, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட குடும்ப நலச் செயலகம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பத்மஜா, ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார்.

மேலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த விழிப்புணர்வு பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) பத்மாவதி, மருத்துவ அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us