ADDED : ஆக 26, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: ராயப்பனுார் கிராமத்தில் கிராமத்தின் ஒளி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு சின்னசேலம் பி.டி.ஓ., ரவிசங்கர் தலைமை தாங்கினார். கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குனர் சக்திகிரி, ஊராட்சி தலைவர் தங்கம் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
ராயப்பனுார் கிராமத்தில் பனைமர விதைகள், நாவல், இலுப்பை, பூவரசன் போன்ற 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். முருகேசன் நன்றி கூறினார்.

