ADDED : மார் 07, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ரவி தலைமை தாங்கினார். பள்ளி மாணவ-மாணவியருக்கு, கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
ஒன்றிய துணை சேர்மன் அன்பு மணிமாறன், போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, தி.மு.க.,நிர்வாகிகள் திராவிடமணி, ராமச்சந்திரன், விஜய், ரஜினி, தமிழ்செல்வன், துரைச் செல்வன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.