தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கல்வராயன்மலை, தியாகதுருகத்தில் 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள்

கல்வராயன்மலை, தியாகதுருகத்தில் 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள்

கல்வராயன்மலை, தியாகதுருகத்தில் 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள்


UPDATED : நவ 18, 2026 05:09 PM

ADDED : நவ 18, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 05:09 PM ADDED : நவ 18, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை, தியாகதுருகம் ஒன்றியத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 400 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் நிரந்தர குடியிருப்பாளர்களாக 400 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது.

பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். 100–க்கும் குறைவான கோழிகளை தவிர வேறு எந்த கால்நடைகள், கறவை மாடுகள் ஆகியவற்றை சொந்தமாக வைத்திருக்க கூடாது. சொந்தமாக 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது. கால்நடை பராமரிப்பு துறையால் குறிப்பிடப்பட்ட வாழ்வாதார திட்டங்களின்கீழ் பயனாளி ஏற்கனவே பயனடைந்திருக்க கூடாது. சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தை பெண்கள், தகுதியுடைவர்களாவர். குறைந்தபட்சம் 40 சதவீத மாற்றுத்திறனை குறிப்பிடும் செல்லத்தக்க யு.டி.ஐ.டி., சான்றிதழை சமர்ப்பிக்கும்பட்சத்தில் தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.

பெருமூளை முடக்கு வாதம் மற்றும் கடுமையான இயக்க குறைபாடு உள்ள நிலைகளும் பரிசீலிக்கப்படும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பொது துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர பணியாளராக இருக்க கூடாது. பயனாளிக்கு வழங்கப்படும் கால்நடைகளை நிர்ணயிக்கப்பட்ட 2 ஆண்டுகள் பராமரிப்பு மருத்துவ சேவைகளை முறையாக பின்பற்றுவதாக உறுதியளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள மருந்தக கால்நடை உதவி மருத்துவமரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us