/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டில் துாங்கிய கர்ப்பிணியிடம் 4 சவரன் செயின் பறிப்பு
/
வீட்டில் துாங்கிய கர்ப்பிணியிடம் 4 சவரன் செயின் பறிப்பு
வீட்டில் துாங்கிய கர்ப்பிணியிடம் 4 சவரன் செயின் பறிப்பு
வீட்டில் துாங்கிய கர்ப்பிணியிடம் 4 சவரன் செயின் பறிப்பு
ADDED : அக் 01, 2025 11:11 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வீட்டில் துாங்கிய கர்ப்பிணியின் கழுத்திலிருந்து 4 சவரன் தங்க தாலி செயினை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரைச் சேர்ந்த மோசஸ் மனைவி நித்யா, 25; கர்ப்பிணியான நித்யா நேற்று முன்தினம் கீழப்பட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அன்றிரவு வீட்டின் ஹாலில் நித்யா மற்றும் அவரது குடும்பத்தினர் படுத்து துாங்கினர்.
புழுக்கம் அதிகம் இருந்ததால் காற்று வருவதிற்காக கதவை திறந்து வைத்து துாங்கினர். நள்ளிரவு 1:00 மணிக்கு, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி வீட்டிற்குள் புகுந்து, துாங்கி கொண்டிருந்த நித்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி செயினை பறித்தார்.
நித்யா சத்தம் எழுப்பியதால், அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் செயின் பறித்த நபரை துரத்தி சென்றனர். அதற்குள் மர்ம ஆசாமி தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்து வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.