UPDATED : அக் 24, 2026 01:02 AM
ADDED : அக் 24, 2026 01:00 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 50 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம், எஸ்.கொளத்துார் பிரிவு சாலையில் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரதாப்குமார், ஏழுமலை மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணியாமல் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வாகனங்களை அதிவேகமாக ஓட்டியது என 50 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
