ADDED : ஆக 14, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
சின்னேசலம்: சின்னசேலம் விஜயபுரம் வள்ளி தெய்வானை சமேத செல்வமுருகன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்கையம்மனுக்கு ஆடி 5வது வெள்ளியை முன்னிட்டு பால்குடம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.
பக்தர்கள் பங்கேற்று பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.
