/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆடித்திருவிழா சுவாமி வீதியுலா
/
ஆடித்திருவிழா சுவாமி வீதியுலா
ADDED : ஆக 13, 2025 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : மேலப்பழங்கூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி சுவாமி வீதியுலா நடந்தது.
வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூர் மகா மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த 6ம் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பெரியநாயகி பிறப்பு, மாவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று இரவு உற்சவர் விநாயகர், 5 தலை நாக வாகனத்தில் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. நாளை காத்தவராயன், ஆரியமாலா சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.