/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் பருத்தி ஏல சந்தை கூடுதல் பதிவாளர் ஆய்வு
/
கள்ளக்குறிச்சியில் பருத்தி ஏல சந்தை கூடுதல் பதிவாளர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் பருத்தி ஏல சந்தை கூடுதல் பதிவாளர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் பருத்தி ஏல சந்தை கூடுதல் பதிவாளர் ஆய்வு
ADDED : டிச 26, 2025 05:22 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் பருத்தி ஏல சந்தையினை கூடுதல் பதிவாளர் சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பருத்தி கொள்முதல் மற்றும் ஏலம், கிடங்கு, சங்க பணியாளர்கள் விவரம், சங்கத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் நடப்பாண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு விபரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடந்தது.
விற்பனைக்காக பருத்தி மூட்டைகளை எடுத்து வந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, எண்ணெய் பிழியும் இயந்திரம் மற்றும் அரவை இயந்திரத்தை பார்வையிட்டார்.
மேலும், திருக்கோவிலுார் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், சரக துணைப்பதிவாளர்கள் ரகு, செந்தில், குறிஞ்சி மணவாளன், துணைப்பதிவாளர் விஜயகுமாரி, கூட்டுறவு சார்பதிவாளர் அருண்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

