/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 09, 2025 11:30 PM

சின்னசேலம்; சின்னசேலம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், வழிபாட்டு மன்றத்திற்கு வழி அமைத்து கொடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சின்னசேலம் வரதராஜ பெருமாள் அருகே ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது. தற்போது, கோவில் முன் தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதனால், சுற்றிலும் இரும்பிலான தகடுகள் மூலம் அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து சின்னசேலம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற தலைவி லதா கதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜ., ஒன்றிய ஆன்மிக தலைவர் தேவராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் விநாயகம், விஸ்வ ஹிந்து பரிஷித் சேவாக் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கு பக்தர்கள் சென்று வரும் கிழக்கு அல்லது இடது புறத்தில் வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.