/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் ரூ.11.46 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : அக் 09, 2025 11:30 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 27,203 பயனாளிகளுக்கு 11.46 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் தொழிலாளர் நலனை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம்) சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதில் புதிய உறுப்பினராக 48 ஆயிரத்து 275 அமைப்பு சாரா தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த, வெளி மாநில தொழிலாளர்கள் 105 பேர் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, புதிய ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு, விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் ஆகிவற்றின் கீழ் உதவித் தொகையாக கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 27,203 பயனாளிகளுக்கு 11 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரத்து 298 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.