/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 12:03 AM

கள்ளக்குறிச்சி; தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் முருகேசன், துணை செயலாளர் ரீதா, துணை தலைவர் கபில்தேவ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கலியபெருமாள், நிர்வாக குழு உறுப்பினர் வளர்மதி, துணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
தேசிய ஊரக வேலை திட்டத்தில் நுாறு நாள் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்கவில்லையெனில் நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டம், கனவு இல்ல திட்டத்திற்கு 6 லட்சம் நிதி வழங்க வேண்டும். வீடு கட்ட இடம் இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகிகள் ரவி, அஞ்சாபுலி, பால்ராஜ், ராஜி, கல்யாணசுந்தரம், மஞ்சப்பன், ராமு, ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.