UPDATED : அக் 31, 2026 07:56 PM
ADDED : அக் 31, 2026 07:54 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி., சார்பிலங் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் ஆண்டாள், அருண், பொருளாளர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர்கள் அப்பாவு, முனுசாமி, மாவட்ட நிர்வாக குழு வில்சன், கவுதமி முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி, தலைவர் வளர்மதி கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
தமிழக அரசு விரிவான தொழிலாளர் கொள்கைளை உடனடியாக அறிவிக்க வேண்டும். மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம், கட்டட உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட முத்தரப்பு குழுக்களை நியமித்து செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட நிர்வாகிகள் மனோகரி, அமுதா, சின்னப்பையன், ராஜி, ஜெயராமன், மேரி, மலர்கொடி, கனி, மணிக்கண்ணு, சீனுவாசன், சிலம்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
