/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 06, 2025 05:45 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் மாநில அளவில் மொத்தம்,100 பேருக்கு விருதும், தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழில் துறைகள் ஆகியவற்றிற்கு விருது வழங்கப்படும்.
விருதுக்கு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு, புதுமையான பசுமை தயாரிப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு சுற்றுச் சூழல் தொடர்பான திட்ட பணிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம், கலெக்டர் தலைமையிலான விருதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும்.
இதற்கான, விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் வரும், ஜன., 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

