/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காவலருக்கான பணிநியமன ஆணை: எஸ்.பி., வழங்கல்
/
காவலருக்கான பணிநியமன ஆணை: எஸ்.பி., வழங்கல்
ADDED : நவ 28, 2024 05:38 AM

கள்ளக்குறிச்சி; இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எஸ்.பி., பணி நியமன ஆணை வழங்கினார்.
சென்னை, திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டி.எஸ்.பி., ஜெயபாலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.