/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவர் கைது
/
'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவர் கைது
ADDED : பிப் 09, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே ஆடு வளர்க்கும் தகராறில் 'ஏசி' மெக்கானிக்கை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 34; 'ஏசி' மெக்கானிக். இவர், சில மாதங்களுக்கு முன், குல தெய்வ வழிபாட்டிற்காக ஆடு வாங்கி அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன், 60; என்பவரிடம் வளர்க்க கொடுத்தார்.
இது தொடர்பாக கடந்த, 7ம் தேதி ஏற்பட்ட தகராறில் பாண்டுரங்கனை கொடுவாளால் கண்ணன் தாக்கினார்.
இது குறித்த புகாரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.