/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சட்டசபை பொது கணக்கு குழு வளர்ச்சி திட்ட பணி ஆய்வு
/
சட்டசபை பொது கணக்கு குழு வளர்ச்சி திட்ட பணி ஆய்வு
சட்டசபை பொது கணக்கு குழு வளர்ச்சி திட்ட பணி ஆய்வு
சட்டசபை பொது கணக்கு குழு வளர்ச்சி திட்ட பணி ஆய்வு
ADDED : நவ 25, 2025 05:04 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சட்டசபை பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் அப்துல்சமது, அய்யப்பன், சரஸ்வதி, தலைமைச் செயலக முதன்மை செயலர் சீனுவாசன் ஆகியோர் கலெக்டர் பிரசாந்த், மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் மீட்பு உபகரணங்கள், பிரதிவிமங்கலம் ஏரியின் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மற்றும் திருக்குடமுழுக்கு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்.
பின், கள்ளக்குறிச்சி நகராட்சி இயற்கை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கிடங்கினை பார்வையிட்டு, இயற்கை உரம் தயாரிப்பு பணிகள், உரம் தயாரிக்கும் கால அளவு, இயற்கை உரம் விவசாயிகளுக்கு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து சின்னசேலம் பேரராட்சியில் 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு கட்டுமான பொருட்களின் தரம், பணி முடிவடையும் காலம் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது அக்டோபர் மாதத்திற்குள் பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிக்க வேண்டிய நிலையில், இதுவரை முடிக்காதது தெரிந்தது. இதனையடுத்து வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கும், பேரூராட்சி செயல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பொது கணக்கு குழு பரிந்துரைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆய்வின்போது மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி கமிஷனர் சரவணன், பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், செயல் அலுவலர் கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பள்ளி கல்வி, நிதித்துறை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தணிக்கை பத்திகள் மற்றும் அதன் மீதான பதில் அறிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷனி, திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

