தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர்களுக்கு தடகள போட்டி 

மாணவர்களுக்கு தடகள போட்டி 

மாணவர்களுக்கு தடகள போட்டி 


ADDED : அக் 26, 2024 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. ஏ.கே.டி., பள்ளி விளையாட்டு மைதானத்தில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், மற்றும் 100 மீ., முதல் 1,500 மீ., வரையிலான ஓட்ட பந்தயம் உள்ளிட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

துவக்க விழாவில் டி.ஆர்.ஓ., சத்தியநாராய ணன் ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us