/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது
/
பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது
ADDED : நவ 16, 2025 11:53 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் மாயகிருஷ்ணன்,29; இவர், கடந்த 14ம் தேதி தனது பைக்கை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் டிரைவிங் பள்ளிக்கு முன்புறம் நிறுத்தியிருந்தார்.
சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்து பார்த்த போது, பைக் காணாமல் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து , அங்கு சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில், பைக்கை திருடியது முடியனுார் ஏழுமலை மகன் மணிகண்டன்,35; என்பது தெரிந்தது. மேலும், கடந்த 12ம் தேதி கச்சேரி சாலையில் ஓட்டலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மணிகண்டன் திருடியது தெரிந்தது.
இதையடுத்து, மணிகண்டனை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

