/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது கணக்கு குழு ஆய்வு ஒத்தி வைப்பு
/
பொது கணக்கு குழு ஆய்வு ஒத்தி வைப்பு
ADDED : நவ 16, 2025 11:53 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு சட்டசபை பேரவை 2024--26ம் ஆண்டிற்கான ஆய்வு பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை பேரவையின் 2024-2026ம் ஆண்டிற்கான பொது கணக்கு குழு கூட்டம் நாளை (18ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. இதற்காக குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையில் பொது கணக்கு குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு கள்ளக்குறிச்சிக்கு வருகை புரிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால் பொது கணக்கு குழு வருகை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மற்றொரு நாளில் பொது கணக்கு குழு கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

