/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்தரங்கம்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்தரங்கம்
ADDED : நவ 16, 2025 11:52 PM

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
கச்சிராயபாளையத்தில், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சார்பில் விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது. ஆலையின் செயலாட்சியர் லதா தலைமை தாங்கினார்.
பூச்சியியல், மண்ணியல், மற்றும் உழவியல் விஞ்ஞானிகள் துரைசாமி, பாபு மற்றும் பேராசிரியர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கரும்பு பெருக்கு அலுவலர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.
ஆலை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோதனை வயல் மற்றும் மாதிரி வயல்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதில் மேற்கொள்ளப்படும் நவீன முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும் கரும்பு சாகுபடியில் ஏற்படும் வேர்ப்புழு தாக்குதல் தடுப்பு முறைகள் பொக்கா போயிங் நோய், மஞ்சள் இலை நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகளையும் பூச்சியியல் துறை வல்லுநர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும் மண்ணின் வளம் மற்றும் மண்ணை வளப்படுத்தும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஆலையின் தலைமை அலுவலர்கள் கரும்பு அலுவலர்கள் களப்பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கரும்பு அலுவலர் ஆன்றன்சேவியர்அருள் நன்றி கூறினார்.

