ADDED : பிப் 28, 2026 05:56 AM

ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் செயல் அலுவலரை கண்டித்து, சிலர் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
வாணாபுரம் தாலுகா, ஆதிதிருவரங்கத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. ஆதிதிருவரங்கம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவில் செயல் அலுவலர் மீது பல்வேறு புகார்களை முன் வைத்துள்ளனர். கோவிலில் பணி நியமனம் செய்வற்காக லஞ்சம் பெற்றதாகவும், கோவில் பணம் கையாடல், கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் குத்தகை பணம் வசூல் செய்யாமல் மறைத்தது, கோவிலில் உள்ள மாடுகளை முறையாக பராமரிக்கவில்லை, கோவிலில் நடைபெறும் திருமணத்திற்கு அதிகளவு பணம் வசூலிக்கப்பது என பல புகார்களை முன்வைத்து கிராம மக்கள் சிலர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

