/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு வார விழாவில் ரத்த தான முகாம்
/
கூட்டுறவு வார விழாவில் ரத்த தான முகாம்
ADDED : நவ 20, 2025 05:39 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி ரத்த தான முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
துணைப் பதிவாளர்கள் குறிஞ்சி மணவாளன், ரகு, சாந்தி (பொது விநியோக திட்டம்) முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். முகாமில் 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
நிகழ்ச்சியில், அலுவலக கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கோலப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல், உளுந்துார்பேட்டை அடுத்த செம்பியமாதேவி கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த பாரம்பரிய உணவு திருவிழாவில், மணிலா, அவுல், காய்கறி மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

