/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
/
தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 08, 2025 09:38 PM

திருக்கோவிலுார்; கள்ளக்குறிச்சி மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செவிலியர் மீனாகுமாரி வரவேற்றார். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்ட சேர்மன் பொன்னரசு தலைமை தாங்கி தாய்ப்பாலின் சிறப்பம்சங்கள் குறித்தும், அதன் அவசியம் பற்றி கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் எடுத்து கூறி விழிப்புணர்வு தகவல் கையேடுகளை வழங்கினார்.
துணைச் செயலாளர் இளையபெருமாள், மாவட்ட செயலாளர் இம்மானுவேல் சசிகுமார், பொருளாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.