ADDED : டிச 06, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா, 43; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு வெளியே சென்றவவர் மாலை 4:00 மணியளவில் இந்திலி ஏரிக்கரை அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.
உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.