/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நெஞ்சு வலியால் புரோக்கர் சாவு
/
நெஞ்சு வலியால் புரோக்கர் சாவு
ADDED : அக் 13, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; அரசு பஸ்சில் சென்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சண்முகவேல், 48; ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் நேற்று முன்தினம் அரசு பஸ்சில் சென்னையில் இருந்து மதுரை சென்றார். இரவு 11:00 மணிக்கு பஸ் உளுந்துார்பேட்டை செங்குறிச்சி டோல்கேட் சென்றபோது சண்முகவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார்.
உடனடியாக 108 ஆம்புலன் ஸ் மூலம் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.