/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்
/
ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்
ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்
ரூ. 2.5 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை பணி துவக்கம்
ADDED : அக் 13, 2025 12:22 AM

கள்ளக்குறிச்சி; கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை கட்டும் பணிகளை கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கல்வராயன்மலையில் பொதுப்பணி துறை சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இரண்டு தளங்களுடன் கட்டப்படவுள்ள இந்த ஆய்வு மாளிகையில் நுழைவு அறை, மின்துாக்கி, உணவு அருந்தும் அறை, சமையல் கூடம், 3 தங்கும் அறைகள் கட்டப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மாலா, கல்வராயன்மலை ஒன்றிய சேர்மன் சந்திரன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.