/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மீது பஸ் மோதி விபத்து; இருவர் படுகாயம்
/
பைக் மீது பஸ் மோதி விபத்து; இருவர் படுகாயம்
ADDED : டிச 08, 2025 06:50 AM
மூங்கில்துறைப்பட்டு: சவேரியார் பாளையத்தில் பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கண்ணியை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் அருண், 22; ராம் சிவன் மகன் ராகேஷ், 22; இருவரும், மூங்கில்துறைப்பட்டு சவேரியார் பாளையம் தாமஸ் நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து நேற்று மாலை பைக்கில் புறப்பட்டனர். தாமஸ் நகர் மெயின்ரோடு அருகே சென்றபோது, சங்கராபுரத்தில் இருந்து திருவண்ணாமலை சென்ற தனியார் பஸ் பைக் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அருண், ராகேஷ் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரிக்கின்றனர்.

