ADDED : ஜன 22, 2025 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:உளுந்துார்பேட்டை அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம், 60, கீரை வியாபாரி. நேற்று காலை 5:45 மணிக்கு, தன் மொபட்டில், ஊருக்கு திரும்பினார். உளுந்துார்பேட்டை சாலையில், கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தை கடந்தபோது, சாலையோரம் இருந்த நுாற்றாண்டு கால ஆலமரம் முறிந்து விழுந்தது. இதில், விநாயகம் சிக்கி, அதே இடத்தில் இறந்தார்.
விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மரக்கிளையை அகற்றி, உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.