/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில தகராறில் 10 பேர் மீது வழக்கு
/
நில தகராறில் 10 பேர் மீது வழக்கு
ADDED : அக் 12, 2025 04:35 AM
திருவெண்ணெய்நல்லுார் : உளுந்துார்பேட்டை அருகே நில தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ராசாத்தி, 41; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 59; என்பவருக்குமிடையே நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராசாத்தி வீடு கட்டுவதற்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் செந்தில்குமார், மாணிக்கம், கோவிந்தம்மாள், திவ்யா, தேவி, கஸ்தூரி ஆகிய 7 பேரும் ராசாத்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது இரு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இருதரப்பு அளித்த புகாரின்பேரில் எடைகல் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.