/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை தாக்கிய வழக்கு 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
/
பெண்ணை தாக்கிய வழக்கு 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
பெண்ணை தாக்கிய வழக்கு 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
பெண்ணை தாக்கிய வழக்கு 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
ADDED : அக் 29, 2025 11:36 PM
சங்கராபுரம்: மணக்காடு பகுதியில் நிலப்பிரச்னை காரணமாக பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த மணக்காடு ராஜேஷ் மனைவி சுகன்யா, 28; திருமணமாகி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். தனது தந்தைக்கு சொந்தமான இடத்தின் அருகே பொது இடத்தில் கடந்த 27ம் தேதி பைப் நட்டார். அப்போது எதிர் தரப்பை சேர்ந்த பொன்னுசாமி மகன் செந்தில், 41; செந்தில் மனைவி அஞ்சலை, 37; பொன்னுசாமி மனைவி வள்ளி,60; மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து இவரது தந்தையை கத்தியால் வெட்ட முயன்றனர். அதனை தடுக்க முயன்ற சுகன்யாவையும் தாக்கினர். இது குறித்து புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் அஞ்சலை, வள்ளி மற்றும் சிறுவன் மீது வழக்குபதிந்து செந்திலை கைது செய்தனர்.