/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
/
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : நவ 21, 2025 05:24 AM
கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் திருமணமான ஒராண்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அஜிஸ் நகரைச் சேர்ந்தவர் சரவணன் மகள் விஷ்ணுபிரியா,24; இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மனோகர் மகன் தனசேகரன்,30; கடந்த 2024ம் ஆண்டு ஜன., 21ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பின் கணவர் தனசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈஸ்வரி, குணசேகரன், கனிமொழி ஆகியோர் சேர்ந்து விஷ்ணுபிரியாவை கொடுமைபடுத்தியுள்ளனர்.
இது குறித்த விஷ்ணுபிரியா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் கணவர் தனசேகரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.