/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு சிறுமிகளுக்கு திருமணம் 10 பேர் மீது வழக்கு பதிவு
/
இரு சிறுமிகளுக்கு திருமணம் 10 பேர் மீது வழக்கு பதிவு
இரு சிறுமிகளுக்கு திருமணம் 10 பேர் மீது வழக்கு பதிவு
இரு சிறுமிகளுக்கு திருமணம் 10 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 16, 2025 02:31 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக இரு தனித்தனி வழக்குகளில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தியாகதுருகம் புக்குளம் பகுதியை சேர்ந்த கோபி மகன் மணிகண்டன், 29; இவர், 17 வயது சிறுமியை கடந்த 2023 ஜூன் மாதம் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பினியாக உள்ளார்.
இதனையறிந்த தியாகதுருகம் ஊர்நல அலுவலர் சக்தி கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டன் மற்றும் திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் கோபி, அஞ்சலை, சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம் கல்வராயன்மலையில் உள்ள தாழ்மொழிப்பட்டு பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் தினேஷ், 23; இவர் இன்னாடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த பிப்., மாதம் திருமணம் செய்தார். தற்போது அச்சிறுமி 3 மாத கர்ப்பினியாக உள்ளார்.
இதனை அறிந்த கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் ஊர்நல அலுவலர் செல்வி கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் தினேஷ் மற்றும் திருமணம் செய்து வைத்த அவரது பெற்றோர் அண்ணாமலை, பவளக்கொடி, சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.