/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
/
உளுந்துார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
உளுந்துார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
உளுந்துார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
ADDED : அக் 16, 2025 02:33 AM

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை பத்திர பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்யராஜ் மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை திடீர் ரெய்டு நடத்தினார். அங்கு, சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பத்திர பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்தினர்.
அப்போது, பத்திர பதிவுக்கு அதிகளவில் லஞ்சம் பெறுவதாக அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். பத்திர பதிவு அலுவலகத்தை பூட்டி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதற்கு முன்பே, சார் பதிவாளர் தாமோதரன், அலுவலகத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.