/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் : 3 பேர் மீது வழக்கு பதிவு
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் : 3 பேர் மீது வழக்கு பதிவு
பெண்ணுக்கு கொலை மிரட்டல் : 3 பேர் மீது வழக்கு பதிவு
பெண்ணுக்கு கொலை மிரட்டல் : 3 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 03, 2025 11:21 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வீட்டு மனை வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளத்தை சேர்ந்தவர் தாவாயி, 52; இவருக்கும், மேகூரைச் சேர்ந்த கண்ணன் மகன் மோகனுக்கும் வீட்டு மனை வாங்குவதில் பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்னையில் மோகன், சோமண்டார்குடி செந்தில்குமார், சங்கர் ஆகியோர் சேர்ந்து தாவாயியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தாவாயி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.