/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை
/
பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை
ADDED : நவ 05, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: இந்திலி பால முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் மங்கல இசையுடன் வேத பாராயணம், திரவிய மகாபிஷேகம் மற்றும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகளுக்குப்பின் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் தேவநாதன் பட்டர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

