/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லாநத்தம் பள்ளியில் கொடி கம்பம் அமைப்பு
/
கல்லாநத்தம் பள்ளியில் கொடி கம்பம் அமைப்பு
ADDED : நவ 05, 2025 10:51 PM

சின்னசேலம்: சின்னசேலம் வாசவி வனிதா கிளப் சார்பில் கல்லாநத்தம் உயர்நிலைப்பள்ளியில் 20 அடி உயர கொடி கம்பம் அமைத்து கொடுக்கப்பட்டது.
சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சின்னசேலம் வாசவி வனிதா கிளப் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 20 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியில், புதுச்சேரி வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் முரளி குப்தா தலைமை தாங்கி கொடிக்கம்பத்தை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், வாசவி சங்க தலைவர் வேலுமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், ஊராட்சி தலைவர் ஆசைமுத்து, பொறியாளர் நேசமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி வனிதா கிளப் மாவட்ட ஆளுநர் முரளி குப்தா தலைமையில் அலுவல் கூட்டம் நடந்தது .

